இவரே பெருமான்‌ மற்றப்‌

இவரே பெருமான்‌, மற்றப்‌
பேர்‌ அலவே பூமான்‌,-இவரே பெருமான்‌.

1. கவலைக்‌ கிடங்கொடுத்‌ தறியார்‌,-வேறு
பவவினை யாதுமே தெரியார்‌,-இப்‌
புவன” மீது நமக்குரியார்‌. - இவரே

2. குருடர்களுக்‌ குதவும்‌ விழியாம்‌,-பவக்‌
கரும இருளை நீக்கும்‌ ஒளியாம்‌,-தெய்வம்‌
இருக்குந்‌ தலஞ்செல்‌ வாசல்‌ வழியாம்‌ - இவரே

3. பலபிணி தீர்க்கும்‌ பரிகாரி,-சொல்லும்‌
வலமையில்‌ மிக்க விபகாரி,-எக்‌
குலத்துக்கும்‌ நல்ல உபகாரி. - இவரே

4. அறஞ்‌ செய்வதினில்‌ ஒரு சித்தன்‌,-கொடு
மறம்விடு பவர்க்கருள்‌ முத்தன்‌,-இங்கே
இறந்தோர்க்‌ குயிரீயும்‌ கர்த்தன்‌. - இவரே

5. அலகைதனை' ஜெயித்த வீரன்‌,-பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன்‌,-விண்‌
ணுலகு வாழ்‌ தேவ குமாரன்‌. - இவரே

6. பொன்னுலகத்‌ தனில்வாழ்‌ யோகன்‌,-அருள்‌
துன்ன! உலகில்‌ நன்மைத்‌ தேகன்‌,-நம்பால்‌
தன்னை யளித்த ஓர்‌ தியாகன்‌. - இவரே

- த. ஐயாத்துரை பாகவதர்‌

Start Downloading Your Apps