இயேசுவின்‌ நாமமே திருநாமம்

இயேசுவின்‌ நாமமே திருநாமம்‌,-முழு
இருதயத்தால்‌ தொழுவோம்‌ நாமும்‌.

1. காசினியில்‌ அதனுக்‌ கிணையில்லையே;-விசு
வாசித்த பேர்களுக்குக்‌ குறையில்லையே. - இயேசு

2. இத்தரையில்‌ மெத்தவதி சயநாமம்‌;-அதை
நித்தமுந்‌ தொழுபவர்க்கு ஜெயநாமம்‌. - இயேசு

3. உத்தம மகிமைப்‌ பிரசித்த நாமம்‌;-இது
சத்திய விதேய மனமொத்தநாமம்‌. - இயேசு

4. விண்ணவரும்‌ பண்ணுடன்‌ கொண்டாடும்நாமம்‌;-நமை
அண்டிடும்பேய்‌ பயந்தோடு தேவநாமம்‌. - இயேசு

5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி;-பெரும்‌
பாவப்பிணிகள்‌ நீக்கும்‌ பரிகாரி. - இயேசு

ச. ஞானமணி

Start Downloading Your Apps