தேவதே ஓர்‌ ஏக வஸ்து தேவ

தேவதே, ஓர்‌ ஏக வஸ்து, தேவ நாமனாம்‌ கிறிஸ்து,
தேவன்‌ ஆதியே நமா!

ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா,
நமஸ்து-ஒரு-தேவதே

சரணங்கள்‌

1. மூவராய்‌ அரூபியாய்‌ முன்‌ ஊழி ஊழி காலம்‌ வாழ்‌
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா!-ஒரு - தேவதே

2. ஆதியாய்‌ அனாதியாய்‌, அரூபியாய்ச்‌ சொரூபியாய்‌,
நீதி ஞாய நேர்மையாய்‌, நீடூழி ஆள்‌ சுயாதிபா!-ஒரு - தேவதே

3, மாசில்லா நேச வாச மட்டில்லா நன்மையே,
தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே!-ஒரு - தேவதே

4. ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி, ஏகமாம்‌, ஆனந்தமே,
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே!-ஒரு - தேவதே

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps