பஜித்திடும்‌ சுவிசேட திருச்சபை

பஜித்திடும்‌ சுவிசேட திருச்சபையாரே,
பரனை நினைத்துத்‌ தினம்‌ மகிழ்வீரே.

சரணங்கள்‌

1. பஜித்திடும்‌ சுவிசேஷசபைக்குள்‌ வந்தோரே,
பரனருளால்‌ ஜெயமடைந்தீரே,
துஐம்‌ பிடித்தே ஜெயமெனப்‌ புகல்வீரே,
தோத்ரசங்கீர்த்தனம்‌ துத்யம்‌ செய்வீரே. - பஜி

2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள்‌ வழிபோவேமே.
சத்ய மறைபிடிக்கில்‌ வழிதவறோமே,
தத்வ குணாகரன்‌ தனைத்துதிப்போமே. - பஜி

3. திருக்குருசில்‌ மரித்தோரது நேசம்‌,
தினம்‌ மறவாதே, வைவிசுவாசம்‌.
இரக்க புண்ணியங்களால்‌ எழில்‌ நகர்வாசம்‌,
இனிபெறலாமென வெண்ணுதல்‌ மோசம்‌. - பஜி

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps