தீய மனதை மாற்ற வாரும்‌ தூய

தீய மனதை மாற்ற வாரும்‌, தூய ஆவியே,-கன
நேய ஆவியே.

சரணங்கள்‌

1. மாய பாசத்‌ தழுந்தி வாடி மாளுஞ்‌ சாவிதால்‌,-மிக மாயும்‌
பாவி நான்‌. - தீய

2. தீமை செய்ய நாடுதென்றன்‌ திருக்கு நெஞ்சமே,-மருள்‌'
தீர்க்கும்‌, தஞ்சமே. - தீய

3. பரத்தை நோக்க மனம்‌ அற்றேனே, பதடிதான்‌,” ஐயா.-ஒரு
பாவி நான்‌ ஐயா. - தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே,-அதைப்‌
புகழ்ந்து காக்கவே. - தீய

5. ஏக்கத்தோடென்‌ மீட்பைத்‌ தேடி, இரந்து கெஞ்சவே,-தினம்‌
இதயம்‌ அஞ்சவே. - தீய

6. கிறிஸ்து மீது நாட்டங்‌ கொண்டு கீதம்‌ பாடவே,-அவர்‌
கிருபை தேடவே. - தீய

7. தேவ வசனப்‌ பாலின்மீது தேட்டம்‌ தோன்றவே,-மிகு
தெளிவு வேண்டவே. - தீய

8. ஜெபத்தின்‌ தாகம்‌ அகத்தில்‌ ஊற்றி ஜெபித்துப்‌ போற்றவே,-
மிகச்‌ சிறப்பாய்‌ ஏற்றவே. - தீய

- வின்பிரட்‌

Start Downloading Your Apps