பிதாவே பலம் ஈந்திடும்

1. பிதாவே பலம் ஈந்திடும்;
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத்தோடு பாடவும்;
உம் சித்தமே.

2. என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்;
எச்சக்தி சார்பு சாயினும்,
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்;
உம் சித்தமே.

3. பணிவாய் உம்மைப் பற்றுவேன்,
சுதாவாய் சேவை ஆற்றுவேன்,
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்;
உம் சித்தமே.

4. நீர் ஏவி பாதுகாத்திட,
உம் ஞானம் பாதை காட்டிட,
கூடும் எச்செய்கை ஆற்றிட
உம் சித்தமே.

5. நான் அல்ல, நீர்தாம் என்றுமே;
உம் சர்வ சக்தி என்னிலே;
உம் ஆணை ஆஞ்ஞை எனக்கே;
உம் சித்தமே.

6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்;
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்;
விஸ்வாசம் அன்பு வென்றிடும்;
உம் சித்தமே.

Start Downloading Your Apps