ஆகமங்கள்‌ புகழ்‌ வேதா

ஆகமங்கள்‌ புகழ்‌ வேதா, நமோ நமோ!
வாகு' தங்கு குருநாதா, நமோ நமோ!
ஆயர்‌ வந்தனைசெய்‌ பாதா, நமோ நமோ, - அருரூபா,

மாகமண்டல விலாசா, நமோ நமோ!
மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!
வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, - மனுவேலா,

நாகவிம்பம்‌ உயர்‌ கோலா, நமோ நமோ!
காகமும்‌ பணிசெய்‌ சீலா, நமோ நமோ!
நாடும்‌ அன்பர்‌ அனுகூலா, நமோ நமோ, - நரதேவா,

ஏக மந்த்ரமுறு பூமா, நமோ நமோ!
யூக தந்த்ரவதி சீமா, நமோ நமோ!
ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, - இறையோனே!

2. அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ!
மறையவர்கள்‌ தேடிய நூலா, நமோ நமோ!
அதிசய பராபர சீலா, நமோ நமோ, - அருளாளா,

பொறிவினை யுறாத சரீரா, நமோ நமோ!
குறையணுவிலாத குமாரா, நமோ நமோ!
புவன முழுதாள்‌ அதிகாரா, நமோ நமோ, - புதுவேதா,

நிறைவழியின்‌ மேவிய கோனே, நமோ நமோ!
முறைகள்‌ தவறாத விணோனே, நமோ நமோ!
நிதிபெருகு மாரச தேனே! நமோ நமோ, - நெறிநீதா,

இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ!
பறைகள்பல கூடிய போதா, நமோ நமோ!
எருசலை யினீடிய நாதா, நமோ நமோ, - இறையோனே.

-வேதநாயகம்‌ சாஸ்திரியார்

Start Downloading Your Apps