சேனைகளின் தேவன்

சேனைகளின் தேவன்
நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர்
அடைக்கலமானவர்

1. எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தை தந்திடுவார்

2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்

3. தேவ வார்த்தைகள் ஜீவனாமே
என்றென்றும் அறிக்கை செய்வோம்
ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்
ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்

Start Downloading Your Apps