உந்தன்‌ ஆவியே சுவாமி

உந்தன்‌ ஆவியே, சுவாமி, என்றன்‌ மீதினில்‌
வந்து சேரவே, அருள்‌ தந்து காவுமே.

1. முந்துமானிடர்‌ வினை தந்த சாபமும்‌
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே. - உந்தன்‌

2. மதி மயக்குதே; பேயும்‌ மன தியக்குதே,
அதிகமாய்க்‌ கடல்‌ அலை அறைந்து பாயுதே; - உந்தன்‌

3. சத்ய ஆவியைச்‌ சீடர்க்‌ கித்தரை விட,
சித்தமாய்‌ உரை புரி நித்ய தேவனே. - உந்தன்‌

4. பெந்தே கோஸ்‌ தெனும்‌ மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின்‌ அருள்‌ தந்த நேர்மையே, - உந்தன்‌

5. தாசன்‌ யானுமே புகழ்‌ வீசும்‌ வாய்மையே
வாச மாகவே அருள்‌, நேச தேவனே. - உந்தன்‌

- சவரிமுத்து உபாத்தியார்‌

Start Downloading Your Apps