ஆத்துமாவே உன்னை ஜோடி

1. ஆத்துமாவே, உன்னை ஜோடி;
தோஷம் யாவையும் விடு;
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு;
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்.

2. இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்;
உம்மையே இம்மானுவேலே,
பக்தியாய் உட்கொள்ளுவேன்,
தேவரீரே
ஜீவ அப்பமானவர்.

3. மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்;
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்;
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே.

4. உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது;
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று,
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.

Start Downloading Your Apps