ஏசுவையே துதிசெய்‌ நீ மனமே

ஏசுவையே துதிசெய்‌ நீ, மனமே,
ஏசுவையே துதிசெய்‌,-கிறிஸ்‌ தேசுவையே,

சரணங்கள்‌

1. மாசணுகாத பராபர வஸ்து,
நேசகுமாரன்‌ மெய்யான கிறிஸ்து, - ஏசுவையே

2. அந்தரவான்‌ தரையுந்‌ தரு தந்தன்‌,
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்‌. - ஏசுவையே

3. எண்ணின காரியம்‌ யாவும்‌ முகிக்க
மண்ணிலும்‌ விண்ணிலும்‌ வாழ்ந்து சுகிக்க. - ஏசுவையே

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps