ஆண்டவா பிரசன்னமாகி

1. ஆண்டவா! பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்,
ஆசையோடு நிற்கிறோமே,
ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்;
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.

3. ஆண்டவா! மெய் பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்;
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்;
பெந்தே கோஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

Start Downloading Your Apps