வளர்ந்தே பெருகுக என்றே

1.வளர்ந்தே பெருகுக என்றே - உளம்
மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
தளர்ந்தே சோர்வுறும் கால்களே - பலம்
அடைந்தே நடந்திட வாரீர்
பெருகுவோம் வளர்ந்து
பெருகுவோம்-தேவன்
அருளும் அவியின்
அருமையாயம் ஒளியில் - வளர்ந்தே பெருகுவோம்

2.இரு நூறாண்டுகள் மேலாய் - நெல்லை
திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார்
வரும்பல ஆண்டுகள் எல்லாம் - இன்னும்
பெருகிட அருள்வரம் ஈவார்

3.பிரிவினை எழுந்திடும் நேரம் - நம்மை
கரிசனையோடவர் இணைத்தார்
உரிமையாய் ஒருமையில் வளர - அவர்
பரிவுடன் தினம் நடந்திடுவார்

4.தூய்மையில் தவறிய வேளை - நம்மை
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம்கொண்டு மேலும் - நம்மை
தாங்கியே தினம் அணைத்திடுவார்

5.ஒளியென உலகினில் வந்தார் - நம்மை
ஒளியென விளங்கிட அழைத்தார்.
ஒளிதரும் தீபங்களாக - என்றும்
ஒளிர்ந்திட ஓடியே வாரீர்.

Start Downloading Your Apps