இம்மையின் துக்கம் துன்பம்

1. இம்மையின் துக்கம், துன்பம்
கண்ணீரும் மாறிப்போம்;
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.

2. இதென்ன நல்ல ஈடு,
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?

3. இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்;
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்

4. இகத்தின் அந்தகார
ராக்காலம் நீங்கிப்போம்;
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.

5. நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்;
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.

Start Downloading Your Apps