திருமா மறையே அருள்பதியே

திருமா மறையே-அருள்பதியே! நின்‌
திருச்சபை வளர நின்தயை புரியே.

சரணங்கள்‌

1. கருணை வாசகக்‌ கதிர்பலத்‌ தொளிர,
கனகார்‌ புவிநின்றே அகல,
மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, - திருமா

2. யேசு நாமமெங்‌ கணுமொளி வீச,
இறையே நினை மெய்‌ விசுவாச
நேச மோடேயுனின்‌ தாசர்கள்‌ பேச. - திருமா

3. ஞாலம்‌ அந்தமட்‌ டெம்முடனிருக்க,
நயவாக்‌ களித்தாய்‌ எமக்குருக்கச்‌,
சீலமதாயுனின்‌ வசனமதுரைக்க. - திருமா

4. ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய்‌ வெகுதிடனே,
போரற அருளிய நேயமே போலே. - திருமா

5. நின்னையன்றிக்‌ கட்டிட எமக்காகா,
நேயா, தூயா நினை வாகா,
உன்னி உழைத்திடப்‌ பலமளி யேகா. - திருமா

6. சத்ய போதம்‌ இத்தரைதனில்‌ செழிக்க,
தமியோர்‌ நின்‌ புகழே உரைக்க,
நித்திய பாக்கியமே புவிக்‌ களிக்க. - திருமா

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps