கர்த்தாவின் அற்புதச் செய்கை

1. கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக் கெட்டாததாம்;
பொங்கு கடல் கடுங்காற்றை
அடக்கி ஆள்வோராம்.

2. தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே;
மறைத்து வைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே.

3. திகில் அடைந்த தாசரே,
மெய் வீரம் கொண்டிடும்;
மின் இடியாய்க் கார் மேகமே
விண் மாரி சொரியும்.

4. உம் அற்ப புத்தி தள்ளிடும்,
நம்பிக்கை கொள்வீரே;
கோபமுள்ளோராய்த் தோன்றினும்
உருக்க அன்பரே.

5. மூடர் நம்பிக்கையின்றியே
விண் ஞானம் உணரார்;
தெய்வத்தின் ஞானம் தெய்வமே
வெளிப்படுத்துவார்.

Start Downloading Your Apps