பாவ தோஷம் நீக்கிட

1. பாவ தோஷம் நீக்கிட
மீட்பரின் ரத்தம் தானே!
தீய குணம் மாற்றிட
மீட்பரின் ரத்தம் தானே!

பல்லவி
மெய்யாம் ஜீவ நதி
பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்
மீட்பரின் ரத்தம் தானே

2.என்னைச் சுத்தமாக்கிட
மீட்பரின் ரத்தம் தானே
மன்னிப்பை நான் பெற்றிட
மீட்பரின் ரத்தம் தானே

3.வேறே ரக்ஷிப்பில்லையே
மீட்பரின் ரத்தம் தானே!
புண்ணிய கிரியை செல்லாதே!
மீட்பரின் ரத்தம் தானே!

4.மோட்ச மார்க்கம் துவே!
மீட்பரின் ரத்தம் தானே!
ஏக சுத்த தீர்த்தமே!
மீட்பரின் ரத்தம் தானே!

Start Downloading Your Apps