வாரும்‌ எமது வறுமை நீக்க

வாரும்‌, எமது வறுமை நீக்க வாரும்‌, தேவனே;
மழை தாரும்‌, ஜீவனே.

சரணங்கள்‌

1. பாரில்‌ மிகுக்கும்‌ வருத்தத்தாலே பாடும்‌ நீண்டதே; வெகு
கேடும்‌ நீண்டதே. - வாரும்‌

2. நட்ட பயிர்கள்‌ மழை இல்லாமல்‌ பட்டுப்போச்சுதே மிகக்‌
கஷ்டம்‌ ஆச்சுதே. - வாரும்‌

3. பச்சை மரங்கள்‌ கனிகள்‌ இன்றிப்‌ பாறிப்போச்சுதே; அன்னம்‌
பாறல்‌ ஆச்சுதே. - வாரும்‌

4. தரணி யாவும்‌ வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர்‌
தயங்கிறோம்‌ மெய்யாய்‌. - வாரும்‌

5. கருணையுள்ள நாதனே, இத்‌ தருணம்‌ வாருமே; எங்கள்‌
தயங்கல்‌ தீருமே. - வாரும்‌

௪. யோசேபு

Start Downloading Your Apps