யூத ராஜ சிங்கம்‌ உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம்‌ உயிர்த்தெழுந்தார்‌,
உயிர்த்தெழுந்தார்‌, நரகை ஜெயித்தெழுந்தார்‌.

சரணங்கள்‌

1. வேதாளக்‌ கணங்கள்‌ ஓடிடவே,
ஓடிடவே உருகி வாடிடவே. - யூத

2. வானத்தின்‌ சேனைகள்‌ துதித்திடவே,
துதித்திடவே, பரனைத்‌ துதித்திடவே. - யூத

3. மரணத்தின்‌ சங்கிலிகள்‌ தெறிபட்டன,
தெறிபட்டன நொடியில்‌ முறிபட்டன. - யூத

4. எழுந்தார்‌ என்றதொனி எங்குங்‌ கேட்குதே
எங்குங்‌ கேட்குதே, பயத்தை என்றும்‌ நீக்குதே. - யூத

5. மாதர்‌ தூதரைக்‌ கண்டகமகிழ்ந்தார்‌
அகமகிழ்ந்தார்‌, பரனை அவர்‌ புகழ்ந்தார்‌. - யூத

6. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை. - யூத

7. கிறிஸ்தோரே நாமவர்‌ பாதம்‌ பணிவோம்‌
பாதம்‌ பணிவோம்‌, பதத்தைச்‌ சிரமணிவோம்‌. - யூத

Start Downloading Your Apps