இம்மணர்க்‌ கும்மருள்‌ ஈயும்

இம்மணர்க்‌ கும்மருள்‌ ஈயும்‌, பர வாசா!
ஏசுக்‌ கிறிஸ்தையா, ஓ! சருவேசா!

1. செம்மையும்‌ நன்மையும்‌ செல்வமும்‌ தாரும்‌,
தேவரீர்‌ இவ்விரு பேரையும்‌ காரும்‌. - இம்‌

2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,
அவ்விதமாக நீர்‌ இன்றும்‌ செய்வீரே. - இம்‌

3. அன்பன்‌ ஈசாக்கு ரெபேக்காட்‌ கிரங்கி,
ஆபிரகாமுடன்‌ சாராளைக்‌ காத்தீர்‌. - இம்‌

4. உந்‌ தயை பெற்றிவர்‌ ஓங்கிப்‌ பெருகவும்‌,
ஓருவர்க்‌ கொருவர்‌ நல்லன்பில்‌ நிலைக்கவும்‌. - இம்‌

5. தாழ்மை பொறுமைகள்‌, சற்குண மேன்மைகள்‌
தந்தும தாவியைக்‌ கொண்டு காத்தாளுமேன்‌. - இம்‌

6. இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்‌,
இன்ப விசுவாச வீட்டார்‌ என்றாகவும்‌. - இம்‌

- அருள்திரு. பாக்கியநாதன்‌ தாவீது

Start Downloading Your Apps