அப்பா தயாள குணாநந்த

அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா
இப்பாரில்‌ காய்பாமுன்‌ ஏகினீரோ, ஏசுநாதா?

2. குற்றம்‌ சுமத்தப்‌ பொய்ச்‌ சாட்சிகளைத்‌ தேடினாரோ?-அந்தச்‌
செற்றலர்‌' எல்லாம்‌ திரண்டேகமாய்க்‌ கூடினாரோ?

3. கன்னம்‌ அதைத்ததோ?” கண்கள்‌ சிவந்ததோ? சுவாமி,-பொறி
மின்னிக்‌ கலங்கி, விசனம்‌ உற்றீரோ, நன்னேமி?”

4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம்‌ மீதே-தீயர்‌
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார்‌ தீதே.

5. என்‌ கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்‌
பின்‌ கட்டாய்க்‌ கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ?

6. இத்தனை பாடுகள்‌ நீர்‌ பட்ட தென்கொடும்‌ பாவமே,-என்றன்‌
கர்த்தனே, உன்‌ மீதில்‌ வந்ததையோ, தேவ கோபமே?

7. நீர்‌ பட்ட பாட்டைப்போல்‌, ஆர்‌ பட்டுத்தாங்குவார்‌, தேவே?-பல
கார்பட்ட நெஞ்சமும்‌ சீர்பட்டுப்‌ போகுமே, கோவே.

- ஏசுதாசன்‌ அண்ணாவியார்‌

செற்றலர்‌-பகைவர்‌ அதைத்ததோ-வீங்கியதோ
நன்னேமி-கருணைக்கடல்‌
கார்பட்ட- இருளடைந்த(பாவ இருள்‌)

Start Downloading Your Apps