ஆத்துமமே என்‌ முழு உள்ளமே

ஆத்துமமே, என்‌ முழு உள்ளமே,-உன்‌
ஆண்டவரைத்‌ தொழு தேத்து;-இந்நாள்‌ வரை
அன்பு வைத்‌ தாதரித்த-உன்‌
ஆண்டவரைத்‌ தொழு தேத்து.

சரணங்கள்‌

1. போற்றிடும்‌ வானோர்‌, பூதலத்துள்ளோர்‌
சாற்றுதற்‌! கரிய தன்மையுள்ள - ஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும்‌ விநோத
உலக முன்தோன்றி ஒழியாத - ஆத்துமமே

3. தினம்‌ தினம்‌ உலகில்‌ நீ செய்‌ பலவான
வினை பொறுத்‌ தருளும்‌, மேலான - ஆத்துமமே

4. வாதை, நோய்‌, துன்பம்‌ மாற்றி, அனந்த
ஓதரும்‌ தயை செய்‌ துயிர்‌ தந்த - ஆத்துமமே

5. உற்றுனக்‌ கிரங்கி உரிமை பாராட்டும்‌,
முற்றும்‌ கிருபையினால்‌ முடி சூட்டும்‌ - ஆத்துமமே

6. துதிமிகுந்தேறத்‌ தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என்‌ மனமே - ஆத்துமமே

- தைரியம்‌ எழுத்தர்‌

Start Downloading Your Apps