யுத்தம் செய்வோம் வாரும்

1.யுத்தம் செய்வோம், வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்;
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.

யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்;
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!

3. கிறிஸ்து சபை வல்ல
சேனைபோன்றதாம்;
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்,
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே;
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.

4. கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்,
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்;
“நரகத்தின் வாசல்
ஜெயங்கொள்ளாதே”,
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.

5. பக்தரே, ஒன்றாக,
கூட்டம் கூடுமேன்;
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே.

Start Downloading Your Apps