நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா? நீயும் சேவிப்பாயா?

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை
இன்றே நீ தீர்மானம் செய்வாய் - நானும்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?- நானும்

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா? - நானும்

4. நன்மையான ஈவுகளைத்
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்து அவர் சத்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா- நானும்

Start Downloading Your Apps