ஓகோ யேசுவின்‌ நேச மதுரமே

ஓகோ யேசுவின்‌ நேச மதுரமே,
உணர்வாயே பாவி.

சரணங்கள்‌

1. ஓகோ நேசமதுயரமே நீளமோ டாழம்‌
வாகாய்ச்‌ சுரர்நரர்‌ வழுத்துதற்‌ கரிதே. - ஓகோ

2. மாகொடும்‌ பாவம தாலழும்‌ பாவியே,
ஏக தயாபரர்‌ ஸ்நேகமே யுணர்வான்‌. - ஓகோ

3. பாதகந்‌ தீர்க்க இப்பூதலந்‌ தனிலே
நாதனின்‌ அன்புபோலே யேதும்‌ உளதோ? - ஓகோ

4. சத்ரு பூலோகந்‌ தயாபர நேசம்‌
வைத்த பொருளிதை மறந்திடலாமோ? - ஓகோ

5. நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
சாப நிவர்த்திசெய்‌ சற்குரு நோக்கு. - ஓகோ

6. நின்னுயிர்‌ மீட்கவே தன்னுயிர்‌ கொடுத்த
உன்னத நேசம்‌ ஒப்புள தாமோ? - ஓகோ

7. தீவினை தீர்க்கும்‌ தூய்மை யுண்டாக்கும்‌
சாவினைப்‌ போக்கும்‌ சற்குரு நேசம்‌. - ஓகோ

8. இக்கணம்‌ யேசுவையே விசுவாசி
அக்கினி மரணம்போல்‌ அன்பதுபலமாய்‌. - ஓகோ

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps