மாமனோகரா இவ்வாலயம்

மாமனோகரா! இவ்வாலயம்‌-வந்தருள்‌ கூரும்‌,
மாமனோகரா! பராபரா!

சரணங்கள்‌

1. பூமியாளும்‌ நாதனே, நரர்‌
போகம்‌ நாடும்‌ நீதனே!
நாமே வாழ்த்தும்‌ தாசர்‌ நடுவில்‌
தாமதம்‌ இல்லாமல்‌ எழுந்தருள்‌! - மா

2. நாதனே, இவ்வாலயத்தை
நலமாய்த்‌ தந்தாய்‌ தாசர்க்கே;
பாதம்‌ போற்றி வாழ்த்துவோம்‌; குரு
பரனே, பராபரா, தினம்‌. - மா

3. நின்‌ திருத்தயை பொறுமை
நின்‌ திரு மகிமையும்‌
சந்தமாய்‌! நிறைந்திட இதில்‌
சந்ததம்‌ ஈவாய்‌ நின்‌ ஆசியை. - மா

4. தோத்திரம்‌ ஜெபம்‌ தியானம்‌,
தூய்மையாம்‌ பிரசங்கமும்‌,
பார்த்திபா இவ்வாலயத்தில்‌
பக்தியாகவே நடந்திட. - மா

5. நீதி ஞாயம்‌ தெய்வபக்தி,
நேர்மைபேதத்‌ தியானமும்‌
நாதனில்‌ விசுவா சமும்‌ மிஞ்சி
நன்கு போற்ற தாசர்க்கருள்‌ புரி. - மா

- ச.ஜெ. சிய்

Start Downloading Your Apps