அமலா தயாபரா அருள்கூர்

அமலா(1), தயாபரா, அருள்கூர்‌, ஐயா,-குருபரா(2)
சரணங்கள்‌

1. சமயம்‌ ஈராறோர்‌ ஆறு சாஸ்திரங்கள்‌ வேத நான்கும்‌
அமையும்‌ தத்துவம்‌ தொண்ணூற்‌ றாறும்‌, ஆறுங்கடந்த - அம

2. அந்தம்‌ அடி(3) நடு இல்‌ லாத தற்பரன்‌ ஆதி,
சுந்தரம்‌ மிகும்‌ அதீத(4) சோதிப்பிரகாச நீதி. - அம

3.ஞானத்‌ ரவிய வேத நன்மைப்‌ பரம போத,
வானத்‌ தேவப்ரசாத(5) மகிமைக்‌ களவில்லாத. - அம

4. காணப்படா அரூப, கருணைச்‌ சுய சொரூப,
தோணப்படா வியாப(6), சுகிர்தத்(7) திருத்‌ தயாப. - அம

5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,
கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும்‌ வாயா - அம

6. எல்லை இல்லா மெய்ஞ்‌ ஞான ஏக பர வஸ்தான
சொல்‌ அரிதாம்‌ நிதான, துல்லிபத்(8) தொன்றாம்‌ மேலான - அம

7. கருணாகரா, உப காரா, நிராகரா(9)
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அம

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

1) அருஞ்செயல்‌ 2) முதல்‌ ஆசான்‌ 3) ஆதி
4) மனதுக்கு எட்டாத 5) ஜீவ அப்பமாகிய கிறிஸ்து
6) நிறைந்த 7) நற்செயல்‌ 8) நிறைவு-மிகச்சரியான
9) உருவமற்றவனே

Start Downloading Your Apps