நடுக் குளிர் காலம்

நடுக்‌ குளிர்‌ காலம்‌
கடும்‌ வாடையாம்‌;
பனிக்கட்டி போலும்‌
குளிரும்‌ எல்லாம்‌,
மூடுபனி ராவில்‌
யெய்து மூடவே;
நடுக்‌ குளிர்‌ காலம்‌
முண்ணாளே.

2. வான்‌ புவியரும்‌ கொள்ளா
ஸ்வாமி ஆளவே,
அவர்முன்‌ நில்லாது
அவை நீங்குமே;
நடுக்‌ குளிர்‌ காலம்‌
தெய்வப்‌ பாலர்க்கே
மாடு தங்கும்‌ கொட்டில்‌
போதுமே.

3. தூதர்‌ பகல்‌ ராவும்‌
தாமும்‌ அவர்க்கே,
மாதா பால்‌ புல்‌ தாவும்‌
போதுமானது;
கேரூபின்‌ சேராபின்‌
தாமும்‌ அவர்க்கே
தொழும்‌ ஆடுமாடும்‌
போதுமே.

4. தூதர்‌ தலைத்தூதர்‌
விண்ணோர்‌ திரளும்‌,
தூய கேரூப்‌ சேராப்‌
சூழத்‌ தங்கினும்‌,
பாக்கிய கண்ணித்‌ தாயே
நேச சிசு தான்‌
முக்தி பக்தியோடு
தொழுதான்‌.

5. ஏழை அடியேனும்‌
யாது படைப்பேன்‌;
மந்தை மேய்ப்பணாயின்‌
மறி படைப்பேன்‌;
ஞானி ஆயின்‌ ஞானம்‌
கொண்டு சேவிப்பேன்‌;
யானோ எந்தன்‌ நெஞ்சம்‌
படைப்பேன்‌.

Start Downloading Your Apps