அருள் நாதா நம்பி வந்தேன்

1. அருள் நாதா நம்பி வந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரட்சிப்பீர்.

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்;
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6. இயேசுநாதா நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

Start Downloading Your Apps