புண்ணியன்‌ இவர்‌ யாரோ

புண்ணியன்‌ இவர்‌ யாரோ?-வீற்ந்து ஜெபிக்கும்‌
புருஷன்‌ சஞ்சலம்‌ யாதோ?

தண்ணிழல்‌ சோலையிலே சாமநடு வேளையிலே,
மண்ணில்‌ குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக்‌ கெஞ்சும்‌. - புண்

சரணங்கள்‌

1. வேளை நீங்காதோ வென்கிறார்‌;-கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்‌;
ஆளுதவியு மில்லை அடியார்‌ துயிலுகின்றார்‌;
நீளுந்‌ துயர்க்கடலில்‌ நீந்தித்‌ தத்தளிக்கின்றார்‌. - புண்‌

2. பாத்திரம்‌ நீக்கு மென்கிறார்‌;-பிதாவே, இந்தப்‌
பாடகலாதோ வென்கிறார்‌;
நேத்திரம்‌ நீர்பொழிய நிமலன்‌ மேனியில்‌ ரத்தம்‌
நீற்று வியர்வையாக நிலத்தில்‌ சொட்ட மன்றாடும்‌ - புண்‌

3. என்சித்த மல்ல வென்கிறார்‌;-அப்பா, நின்சித்தம்‌
என்றைக்குமாக வென்கிறார்‌;
அன்பின்‌ கடவுள்‌ தமதருங்‌ கரத்திலேயீந்த
துன்பப்‌ பாத்திரத்தடி வண்டலையும்‌ பருகும்‌. - புண்‌

- ல.ஈ. ஸ்தேவான்‌

Start Downloading Your Apps