பொற்பு மிகும்‌ வானுலகும்‌

பொற்பு மிகும்‌ வானுலகும்‌

பூவுலகும்‌ படைத்த பரப்பொருளே,-இங்கே
பொந்திப்பிலாத்‌ தண்மனையில்‌
வந்து நிற்கும்‌ காரணமேன்‌, கோவே?
கிறிஸ்துகற்பனை மீறிய பாவத்தால்‌

கடின நரகாக்கினைப்‌ படாமல்‌-உன்னைக்‌
காப்பதற்‌ கிங்கே ஞாய
தீர்ப்பில்‌ உற்றோம்‌, சீயோனின்‌ மாதே.

துய்ய திரு மேனி எல்லாம்‌
நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்‌
சோறி' சிந்த, வாரதினால்‌
நீர்‌ அடிக்கப்பட்டதென்ன, கோவே?
கிறிஸ்து வையகத்தின்‌ பாதகத்தால்‌
பெய்யும்‌ நடுதீர்வையெல்லாம்‌ ஆற்ற,-இந்த
வாதை எல்லாம்‌ பட்டிறக்க,
போத மனம்‌ சம்மதித்தோம்‌, மாதே.

செய்ய கண்கள்‌ உறச்‌ சிவந்து,
திருக்‌ கன்னங்கள்‌ தடித்து, மிக வீங்கி,-முழுச்‌
சென்னியின்‌ ரோமங்கள்‌ எல்லாம்‌
வின்னமுற்றிங்‌" கிருப்பதென்ன, கோவே?
கிறிஸ்து மையிருளில்‌ குருக்களுடை
மாளிகையில்‌ படுத்தின பாடெல்லாம்‌-இங்கே
வன்‌ கொலைஞரால்‌ அடிக்க,
பங்கமுற்ற கோலம்‌ இது, மாதே

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps