பாதகன்‌ என்‌ வினைதீர்‌ ஐயா

பாதகன்‌ என்‌ வினைதீர்‌, ஐயா, கிருபாகரா, நின்‌
பாடு நினைந்‌ தெனைச்‌ சேர்‌, ஐயா.

தீதகற்றவே சிறந்த
சேண்‌ உலகினிமை விட்டு,
பூதலத்‌ துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. - பாதகன்‌

சரணங்கள்‌

1. வந்துறும்‌ எப்பாவிகளையும்‌-அங்கீகரிக்கும்‌
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன்‌ இடம்‌ வந்துளமே உருகி அழுத மாது
முந்தி மிகச்‌ செய்த பாவம்‌ முழுதும்‌ பொறுத்தாய்‌ அன்றோ?
- பாதகன்‌

2, சிந்தின உன்‌ உதிரம்‌ அதே-தீயோன்‌ மறத்தைச்‌
சின்ன பின்னம்‌ செய்ய வல்லதே;
பந்தம்‌ உற உன்றன்‌ வலப்‌ பாகமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே - பாதகன்‌

3. அற்பவிசுவாசமுளன்‌ ஆம்‌-அடியேனை இனி
ஆதரிப்பதார்‌? உன்‌ தஞ்சமே;
தற்பரா, உனைத்‌ தரிசித்‌ தன்றி நம்பிடேன்‌, எனவே
செப்பின்‌ தோமாவுக்குப்போல்‌, திரு உருக்காட்சி தந்து.
- பாதகன்‌

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps