என்னைத் தேடி இயேசு வந்தார்

என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் (2)
அல்லேலுயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன் - என்னை

1. தேர்ந்து கொண்டார் என்னைத்
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ - என்னை

2. மகனானேன் நான்
மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்- என்னை

3. ஆவி தந்தார் - தூய
ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார் - என்னை

4. சுகமானேன் நான்
சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்- என்னை

Start Downloading Your Apps