வானமும் பூமியும்

1. வானமும் பூமியும்
சமஸ்த அண்டமும்
படைத்த நீர்;
வேதத்தின் ஒளியைப்
பரப்பி இருளை
அகற்றி, செங்கோலை
செலுத்துவீர்.

2. மீட்பை உண்டாக்கவும்
மாந்தரைக் காக்கவும்
பிறந்த நீர்,
பாவத்தை அழித்து
சாத்தானை மிதித்து
மாந்தரை ரட்சித்து
நடத்துவீர்.

3. பாவியின் நெஞ்சத்தை
திருப்பி ஜீவனைக்
கொடுக்கும் நீர்;
சபையை முழுதும்
திருத்தித் தேற்றவும்
ஏகமாய்ச் சேர்க்கவும்
அருளுவீர்.

4. ஞானம் நிறைந்தவர்
அன்பு மிகுந்தவர்
திரியேகரே;
ராஜ்ஜியம், வல்லமை
நித்திய மகிமை,
உமக்கே உரிமை
ஆண்டவரே.

Start Downloading Your Apps