ஆவியை அருளுமே சுவாமீ

ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்‌
காயுயிர்‌ கொடுத்த வானத்தினரசே!

சரணங்கள்‌

1. பாவிக்கு ஆவியின்‌ கனியெனுஞ்‌ சிநேகம்‌,
பரம சந்தோஷம்‌, நீடிய சாந்தம்‌,
தேவ சமாதானம்‌, நற்குணம்‌, தயவு,
திட விசுவாசம்‌ சிறிதெனுமில்லை. - ஆவியை

2. தீபத்துக்‌ கெண்னையைச்‌ சீக்கிரம்‌ ஊற்றும்‌;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்‌,
பாவ அசூசங்கள்‌' விலக்கியே மாற்றும்‌,
பரிசுத்தவரந்‌ தந்தென்‌ குறைகளைத்‌ தீரும்‌. - ஆவியை

3. நற்கனி தேடிவருங்‌ காலங்க எல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம்‌ விளைவற்ற உவர்நில மல்லவோ? - ஆவியை

- அருளானந்தம்‌

Start Downloading Your Apps