ஐயா உமது சித்தம்‌ ஆகிடவே

ஐயா, உமது சித்தம்‌ ஆகிடவே வேணும்‌,

மெய்யாய்‌ எனது சித்தம்‌ வெகுமோசமே காணும்‌.- ஐயா

சரணங்கள்‌

1. ஆடுபோல்‌ வழிதப்பி அவனவன்‌ வழியொப்பிக்‌
கேடடைந்தோர்‌ பாவத்தைக்‌ கிறிஸ்துமேல்‌ சுமத்தினீர்‌. - ஐயா

2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர்‌ நினைக்கினும்‌. - ஐயா

3. வசை, இசை, பகை, நேசம்‌, வாழ்வுயர்‌ வதிமோசம்‌,
பசி, நிருவாணம்‌, நாசம்‌, பாடு, நோயடைகினும்‌ - ஐயா

4. என்னிஷ்டம்‌ வாயாததால்‌ எத்தனை துயர்கொண்டேன்‌,
பொன்னடிக்‌ கீழடங்கிப்‌ புகழுமக்கென்று வாழ்வேன்‌. - ஐயா

5. குயவன்கைக்‌ களிமண்ணாய்க்‌, குருவே உமக்கமைவேன்‌,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! - ஐயா

- அருள்திரு. ஜி. சே. வேதநாயகம்‌

Start Downloading Your Apps