வேறு ஜென்மம்‌ வேணும்

வேறு ஜென்மம்‌ வேணும்‌,-மனம்‌
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்‌

சரணங்கள்‌

1. கூறு பரிசுத்தர்‌ மாறிலா தேவனின்‌
தேறுதலான விண்பேறு பெற இங்கே; -வேறு

2. பாவசுபாவமும்‌ ஜீவியமும்‌ மாறத்‌
தேவனின்‌ சாயலை மேவுவதாகிய; -வேறு

3. மானிடரின்‌ அபிமானத்தினாலல்ல,
வானவரின்‌ கிருபா தானமாய்‌ வரும்‌; -வேறு

4. ஒன்றான ரட்சகர்‌ வென்றியை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; -வேறு

5. மைந்தர்‌ கெடாமல்‌ உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத்‌ தந்த பிதா அருள்‌; -வேறு

6. மண்ணினில்‌ பத்தராய்‌ நண்ணி' நடக்கவும்‌,
விண்ணினில்‌ தூயராய்‌ தண்ணளி” கொள்ளவும்‌; -வேறு

- த. யோசெப்‌பு

Start Downloading Your Apps