நம்பினேன்‌ உன தடிமை நான்‌

நம்பினேன்‌, உன தடிமை நான்‌, ஐயா;-
திடப்படுத்தி என்றனை-
நடத்திக்‌ காப்ப துன்‌ கடமை தான்‌, ஐயா

உம்பரும்‌' புவி நண்பரும்‌ மற்ற
உயிர்களும்‌ பல பொருள்களும்‌ தொழும்‌
தம்பிரானே, மெய்‌ யம்பராபரா,
தாசன்‌ மீது நன்‌ னேசு அருள்‌ செய்‌. - நம்பி

சரணங்கள்‌

1. தீதாம்‌ என்‌ பாவம்‌ யாவையும்‌ பொறுத்து,-திருக்‌ கருணையின்‌
அருள்‌
செய்து பின்வரும்‌ இடர்களை அறுத்து,
வேதாந்தப்படி என்னைத்‌ தான்‌ வெறுத்து-நான்‌ உனைப்பின்‌
செல்ல, உன்‌
மெய்‌ அருளை என்‌ உள்ளத்தில்‌ நிறுத்து;
ஆதாரம்‌ எனக்கார்‌, உனை அன்றி?
அம்புவியில்‌” யான்‌ நம்ப வேறுண்டோ?-உன்‌
பாதா தாரத்தில்‌ ஒதுங்கினேன்‌; எனைப்‌
பாரும்‌, கிருபையைத்‌ தாரும்‌, ஐயனே! - நம்பி

2. சுத்த இருதயத்தினைத்‌ தருவாய்‌-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின்‌ நல்துணை அருள்வாய்‌,
நித்தமும்‌ பய பக்தியைத்‌ தருவாய்‌;-நான்‌ ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்‌எழுந்தருள்வாய்‌;
அத்தனும்‌ அனு கூலனுமான
பத்தனே; பரிசித்தனே, உனைப்‌
பாடினேன்‌; கிருபை சூடி ஆள்‌, ஐயா! - நம்பி

3. ஊக்கமும்‌ மனத்தீர்க்கமும்‌ வேணும்‌,-சுவிசேஷ உரையை
உற்றுப்‌ பார்த்ததில்‌ தேறவும்‌ வேணும்‌;
ஆக்கமும்‌ அன்பர்ச்‌ சேர்க்கையும்‌ வேணும்‌;-உனக்கூழியம்‌
செய்ய ஆவியும்‌ அதின்‌ ஈவதும்‌' வேணும்‌?
ஏக்கமும்‌ மனக்கவலையும்‌ நித்ய
இன்பமுள்ள உன்‌ அன்பின்‌ நல்திரு
வாக்கையே நோக்கி இருப்பதால்‌ என்முன்‌
வாரும்‌, கிருபை தாரும்‌, ஐயனே! - நம்பி

- மறியான்‌ உபதேகியார்‌

Start Downloading Your Apps