இந்நாளே கிறிஸ்து வெற்றியை

1. இந்நாளே கிறிஸ்து வெற்றியை
அடைந்து, தம் பகைஞரைச்
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
ஜெய நாளென்று பாடுவோம்
அல்லேலூயா!

2. பேய் பாவம் சாவு நரகம்
எக்கேடும், இன்றையத்தினம்
எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்
கீழாய் விழுந்து கெட்டது
அல்லேலூயா!

3. இரண்டு சீஷரோடன்றே
வழியில் கர்த்தர் பேசவே,
பேரின்பம் மூண்டு பிறகு
ஆரென்றறியலாயிற்று
அல்லேலூயா!

4. அந்நாளில் சீஷர் கர்த்தரின்
அற்புதக் காட்சி கண்டபின்
துக்கித்தவர்கள் நெஞ்சுக்குச்
சந்தோஷ பூரிப்பாயிற்று
அல்லேலூயா!

5. புளிப்பில்லாத அப்பமாம்
சன்மார்க்கப் போதகத்தை நாம்
வழங்கிக் கொண்டிருக்கிறோம்
புளித்த மாவைத் தள்ளுவோம்
அல்லேலூயா!

6. கர்த்தாவே, எங்கள் நீதிக்காய்
நீர் எழுந்தீர் கெம்பீரமாய்;
வெற்றி சிறந்த உமக்கே
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!
அல்லேலூயா!

Start Downloading Your Apps