அற்புதர் இயேசு அற்புதர்

அற்புதர் (4) இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடன் சங்கீதம் பாடுங்கள் (2)

1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோது
தீர்த்த இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்த போது
காத்த இயேசு அற்புதர் (2)
உலகத்திலிருப்போரிலும் எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதர்- எல்லோரும்

2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர் (2)
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே (2)
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன்
எழுந்த இயேசு அற்புதரே (2)- எல்லோரும்

Start Downloading Your Apps