பாரும்‌ பாரும்‌ ஐயா எனை

பாரும்‌, பாரும்‌, ஐயா,-எனை அன்பாகப்‌
பாரும்‌, பாரும்‌, ஐயா,-திருக்கண்கொண்டு,

பாரில்‌ மகிழ்‌ வெல்லப்‌ பதி மேவிய பரா,
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா,
ஜீவனே ஓசனா - பாரும்‌

சரணங்கள்‌

1. பாவநாசர்‌ பிணையே,-பரி பூரண-மேவும்‌ உயர்‌ துணையே,
வினையை எய்யும்‌
தேவ திருக்‌ கணையே, '-உலகில்‌ உள்ள-யாவர்‌
உனக்கிணையே!
பூவில்‌ இவ்வாண்டெமைப்‌ புனிதநெறியில்‌ காவும்‌,
போதக நாயனே, மாதவ தூயனே,
கோதரும்‌ ஆயனே; ஆதியின்‌ சேயனே! - பாரும்‌

2. ஞாலந்தனில்‌ இருளை-அகற்றிமிகச்‌-சீலந்தரும்‌ அருளே,-
அடியர்கட்கனு
கூலம்‌ நிறைதெருளே',-மனுடர்களின்‌-கோலம்‌ உறும்‌
பொருளே,
காலத்தை எண்ண மெய்க்‌ கருத்தை எனக்களியும்‌;
காரண நேசனே, ஆரண வாசனே,
பூரண ராசனே, தாரணி, ஈசனே. - பாரும்‌

- தேவசகாயம்‌ எழுத்தர்‌

Start Downloading Your Apps