சத்திய வேதத்தைத்‌ தினம்‌ தியானி

சத்திய வேதத்தைத்‌ தினம்‌ தியானி,
சகல பேர்க்கும்‌ அதபிமானி.”

உத்தமஜீவிய வழி காட்டும்‌,
உயர்வானுலகில்‌ உனைக்கூட்டும்‌ - சத்திய

சரணங்கள்‌

1. வாலிபர்‌ தமக்கூண்‌ அதுவாகும்‌;
வயோதியர்க்கும்‌ அதுண வாகும்‌
பாலகர்க்கினிய பாலும்‌ அதாம்‌;
படிமீ தாத்மபசி தணிக்கும்‌. - சத்திய

2. சத்துருப்‌ பேயுடன்‌ அமர்புரியும்‌
தருணம்‌ அது நல்‌ ஆயுதமாம்‌;
புத்திரர்‌ மித்திரரோடு மகிழும்‌
பொழுதும்‌ அதுநல்‌ உறவாகும்‌.- சத்திய

3. புலைமேவிய' மானிட ரிதயம்‌
புனிதம்‌ பெறுதற்கதுமருந்தாம்‌;
நிலையா நரர்வாணாள்‌ நிலைக்க
நேய காயகற்பம்‌ அதாம்‌- சத்திய

4. கதியின்‌ வழிகாணாதவர்கள்‌
கண்ணுக்கரிய கலிக்கம்‌ அது;
புதிய எருசாலேம்பதிக்குப்‌
போகும்‌ பயணத்துணையும்‌ அது.- சத்திய

5. மாந்தர்‌ ரக்ஷிப்படையும்‌ வழி
வழுத்தும்‌ வேதவார்த்தை அது;
வேந்தர்‌ அமைச்சர்‌ முதலெவர்க்கும்‌
விதித்த பிரமாணமும்‌அதுவே. - சத்திய

- மு. சாமுவேல்‌

Start Downloading Your Apps