பாவப்பாரில்‌ உன்னத சமாதானம்

பாவப்பாரில்‌ உன்னத-சமாதானம்‌;
தேவ வாக்கிதுவல்லோ?

சரணங்கள்‌

1. பாவீ, உன்தனுக்‌ கிந்த ஓவிய வாக்கை மீந்த
பாவநாசர்‌ யேசுரத்தம்‌ ஆறுதலைப்‌ பேசுஞ்‌ சத்தம்‌. - பாவப்‌

2. கடுத்தவேலை கூடவே, வருத்தந்தொல்லை நீடவே,
கர்த்தரின்‌ சித்தந்தனைக்‌ கருத்தாய்ச்செய்வ தாறுதல்‌. - பாவப்‌

3. உறவர்‌, நம்‌ முற்றநேசர்‌ புறமொதுங்கினும்‌ யேசு
உறங்காது யாவரையும்‌ உரமாய்‌ அரவணைப்பார்‌. - பாவப்‌

4. வருங்காலான வைகளும்‌ மரணகாலவிருளும்‌
அறவே நம்‌ யேசுவேந்தர்‌ அருளுவர்‌ சமாதானம்‌ - பாவப்‌

5. பரமானந்தமே ஓங்கும்‌, தரணித்துன்பமும்‌ நீங்கும்‌,
பரலோகச்‌ சமாதானப்‌ பரவசம்‌ ஆகுவோம்‌ நாம்‌. - பாவப்‌

- ஜா.ச. சாண்ட்லர்‌

Start Downloading Your Apps