யேசுவுக்கு நமது தேசத்தைச்‌

யேசுவுக்கு நமது தேசத்தைச்‌ சொந்தமாக்கப்‌
பாசமாய்‌ முயல்வோம்‌, தாசரே!

தேசொளி ஞாலமெங்கும்‌ வீசும்‌ யேசுவில்‌ விசு
வாசம்‌ வைத்தன்பின்‌ சுவிசேஷத்தை ஏந்தி. - யேசு

சரணங்கள்‌

1. கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
எங்குமே யேசுராஜா ஆளவே,-அவர்‌
சிங்காரக்கொடி மேலிலங்கக்‌ குடிகளெல்லாம்‌
மங்காச்‌ சந்தோஷ முற்று வாழவே, மன்னன்‌. - யேசு

2. வித்தை பூர்வீக நூல்கள்‌ தத்துவ ஞானத்துக்கு
மெத்தப்‌ பேர்போன இந்து தேசமாம்‌;-இதில்‌
சத்தியமாக வந்த நித்யர்‌ யேசுவின்‌ பரி
சுத்த பரம ஞான ஜோதியாய்த்‌ தோன்ற. - யேசு

3. தீய மாமூல்‌ வழக்கம்‌ ஓய, வீண்பக்தி நீங்க,
மாயக்‌ கோட்பாடு முற்றும்‌ மாறவே,-யேசு
தூயன்‌ சத்தியவேத ஞாயவிதிகள்‌ உள்ளம்‌
பாயநம்‌ நாட்டார்‌ குணமாகவே, வல்ல. - யேசு

4. நம்மை வெறுத்து யேசுநாதனுக்‌ கொப்புவித்துச்‌
செம்மையுடன்‌ உழைத்துச்‌ சேவிப்போம்‌;-அவர்க்‌
குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும்‌ படைத்து
நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்‌. - யேசு

- அருள்திரு. வே. சந்தியாகு

Start Downloading Your Apps