ஆதியாம்‌ மகா ராசனே

ஆதியாம்‌ மகா ராசனே,-எந்த வேளையும்‌
அடிய னோடிரும்‌, ஈசனே

தீதில்லா சருவேசா, தேசுறும்‌ பிரகாசா,
பாதகன்‌ யான்‌ மிகு பலவீனன்‌ ஆனதால்‌, - ஆதியாம்‌

சரணங்கள்‌

1. பாவி பெலனால்‌, ஐயனே,-நின்றால்‌ என்னைப்‌
பகைவர்‌ ஜெயிப்பார்‌, மெய்யனே;
தேவா, துணை நீர்‌ ஐயனே;-சிறியனிடம்‌
சேர்ந்தே வசியும்‌, துய்யனே?,
மேவும்‌ தஞ்சம்‌ எனக்கு வேண்டும்‌, காவலன்‌ நீரே;
சாவுவரையும்‌ என்னைத்‌ தாங்கி அரவணையும்‌. - ஆதியாம்‌

2. இரக்கம்‌ பொழிய வாருமே,-கிருபையாக,
இறைவா, என்னிடம்‌ சேருமே;
உருக்கம்‌ நிறைந்த நீருமே;-அனவரதம்‌”
உந்தம்‌ அருளைத்‌ தாருமே;
செருக்காய்‌ எம்‌ மீதி கலோர்‌ சேதம்‌ செய்ய நினைக்கும்‌
திருக்கை அகற்றி என்னில்‌ தினமும்‌ அருள்புரியும்‌ -ஆதி

- ௪. யோசேப்பு

Start Downloading Your Apps