பாருங்கள்‌ தொடர்ந்து வாருங்கள்

பாருங்கள்‌, தொடர்ந்து வாருங்கள்‌, கொல்கதா
பாதையிற்‌, கோதையரே.

ஆருங்‌ காணவே ஆட்டுவாசல்‌ கடந்து மலை
மேட்டில்‌ நடந்தனந்தங்‌ கோட்டிகள்‌" படுகின்றார்‌ - பாருங்கள்‌

சரணங்கள்‌

1. பொன்னாய்‌ ஒளிரு மேனி மண்ணாய்‌ மடியுதே,
புங்க' உடலெல்லாம்‌ புழுதிகள்‌ படியுதே,
நன்னய மலர்க்‌ கண்கள்‌ கண்ணீர்கள்‌ வடிக்குதே,
நாவும்‌ அஸ்தியும்‌ காய்ந்து சாவுமே பிடிக்குதே. - பாருங்கள்

2. பாவியைத்‌ தேடி வந்த பாதங்கள்‌ பொரியுதே,
பட்சத்தினால்‌ விரித்த கைகளும்‌ நெரியுதே,
நாபிக்கமலம்‌ பற்றிக்‌ கோபித்துக்‌ கரியுதே,
நடையு முடையுந்‌ தொய்ந்து சதைகளும்‌ சரியுதே. - பாருங்கள்‌

3. திருமுக அருள்‌ ஒன்றும்‌ தெரியாதடைந்ததே,
செங்குரு திகளெல்லாம்‌ பொங்கி வடிந்ததே,
சருவ வல்லபம்‌ குன்றித்திறையும்‌ நிறைந்தே,
ஐகமும்‌ பரமுந்‌ துக்க சாகரத்தழுந்துதே. - பாருங்கள்‌

4. துன்ப துரிதத்திலும்‌ அன்பையே பொழிகின்றார்‌,
துட்டர்கள்‌ அதற்காகத்‌ திட்டுகள்‌ மொழிகின்றார்‌,
அன்பாய்ப்‌ பிழைக்கத்‌ தமதாவியைக்‌ கெடுக்கின்றார்‌,
அந்தோ நசரேத்தையர்‌ நொந்தடி எடுக்கின்றார்‌. - பாருங்கள்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps