கும்பிடுகிறேன்‌ நான்‌ கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன்‌ நான்‌ கும்பிடுகிறேன்‌;-எங்கள்‌
குருவேசுநாதர்‌ பதங்‌ கும்பிடுகிறேன்‌.

சரணங்கள்‌

1. அம்புவி படைத்தவனைக்‌ கும்பிடுகிறேன்‌; -எனை
ஆண்டவனை, மீண்டவனைக்‌ கும்பிடுகிறேன்‌;
நம்புமடி யார்க்கருளைக்‌ கும்பிடுகிறேன்‌;-பவ
நாசனைக்‌ க்ருபாசனைக்‌ கும்பிடுகிறேன்‌;
தம்பமெனக்‌! கானவனைக்‌ கும்பிடுகிறேன்‌;-நித்திய
சருவ தயாபரனைக்‌ கும்பிடுகிறேன்‌;
உம்பர்‌ தொழும்‌ வஸ்துவையே கும்பிடுகிறேன்‌;-தொனித்‌
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்‌. - கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக்‌ கும்பிடுகிறேன்‌;-ஒன்றும்‌
ஓப்பதில்லா மெய்ப்பொருளைக்‌ கும்பிடுகிறேன்‌
திருவுருவானவனைக்‌ கும்பிடுகிறேன்‌;-தவிது
சிம்மாசனாதிபனைக்‌ கும்பிடுகிறேன்‌;
குருவென வந்தவனைக்‌ கும்பிடுகிறேன்‌;-யூதர்‌
குருகுல தேவதையைக்‌ கும்பிடுகிறேன்‌;
அருமை ரட்சகனைக்‌ கும்பிடுகிறேன்‌;-என
தாத்துமாவின்‌ நேசர்தனைக்‌ கும்பிடுகிறேன்‌. - கும்பிடு

வே. சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps