என்தன் ஜீவன், இயேசுவே

1.என்தன் ஜீவன், இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2.என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; என்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்

3.என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என்வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்

4.என்தன் ஆஸ்தி தேவரீர்,
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்

5.என்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்து விட்டேனே;
என்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்

6.திருப் பாதம் பற்றினேன்
என்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்கிதேன் நித்தமாய்

Start Downloading Your Apps