என்‌ மீட்பர்‌ உயிரோடிருக்கையிலே

என்‌ மீட்பர்‌ உயிரோடிருக்கையிலே எனக்‌
கென்ன குறைவுண்டு? நீ சொல்‌, மனமே.

சரணங்கள்‌

1. என்னுயிர்‌ மீட்கவே தன்னுயிர்‌ கொடுத்தோர்‌,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்‌;
விண்ணுல குயர்ந்தோர்‌, உன்னதஞ்‌ சிறந்தோர்‌,
மித்திரனே', சுகபத்திர மருளும்‌. - என்‌

2. பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ்‌ சிறந்தோர்‌,
சாபமே தீர்த்தோர்‌ சற்குருநாதன்‌;
சஞ்சலமினியேன்‌? நெஞ்சமே, மகிழாய்‌. - என்‌

3. ஆசிசெய்திடுவார்‌, அருள்மிக அளிப்பார்‌,
அம்பரந்‌ தனிலெனக்காய்‌ ஜெபிப்பார்‌;
மோசமே மறைப்பார்‌, முன்னமே நடப்பார்‌;
மோட்சவழி சத்யம்‌ வாசல்‌ உயிரெனும்‌. - என்‌

4. கவலைகள்‌ தீர்ப்பார்‌, கண்ணீர்‌ துடைப்பார்‌,
கடைசிமட்டுங்‌ கைவிடா திருப்பார்‌;
பவமனிப்பளிப்பார்‌, பாக்கியங்‌ கொடுப்பார்‌,
பரம பதவியினுள்‌ என்றனை எடுப்பார்‌ - என்‌

5. போனது போகட்டும்‌, புவிவசை பேசட்டும்‌,
பொல்லான்‌ அம்புக ளெய்திடட்டும்‌,
ஆனது ஆகட்டும்‌, அருள்மழை பெய்திடும்‌,
அன்புமிகும்‌ பேரின்ப மெனக்கருள்‌ - என்‌

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps