எனக்கொத்தாசை வரும்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
கண்களை ஏறெடுப்பேன்

பல்லவி

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் - எனக்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே - எனக்

3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே- எனக்

4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே- எனக்

5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்- எனக்

Start Downloading Your Apps